சாத்துார்: 3ம் கட்ட அகழாய்வில் தங்கத்தினால் மணி கண்டெடுப்பு..

72பார்த்தது
சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் தங்கத்தினால் ஆன மணி கண்டெடுப்பு.
விருதுநகர் மாவட்டம், சாத்துார் அருகே உள்ள வெம்பகோட்டை, விஜயகரிசல்குளம் மூன்றாம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அகழாய்வில் இதுவரை தங்க நாணயம், செப்பு காசுகள், உடைந்த நிலையிலுள்ள சூடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லு, பழமையான கற்கள் உள்ளிட்ட 2800க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் தோண்டப்பட்ட அகழாய்வு குழியில் 1. 28 மீட்டர் ஆழத்தில் 0. 15 கிராம் எடையுள்ள தங்கத்தினால் ஆன மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த மணி பல ஆயிரம் ஆண்டுகாலமாகவே தமிழர் நாகரிகம் பொன்னும் பொருளும், அறிவும் நிறைந்த செழிப்பான மூத்த நாகரிகமாக இருந்தது என்பதற்கு மேலும் ஒரு சான்றாக, தங்கமணி அமைந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி