சாத்துார் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்.
விருதுநகர் மாவட்டம்,
சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியதிற்குட்பட்ட
எம். துரைச்சாமிபுரம் கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள தெருவில் வசிக்கும் பொதுமக்களின் தேவைக்காக பொது சுகாதார வளாகம் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டு மக்கள் பண்பாட்டில் இருந்து வந்தன. இதையடுத்து சுகாதார வளாக கட்டிடம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் இருந்ததால் மக்களின் பாதுகாப்பு கருதி அதனை இடிந்து அகற்றிவிட்டு ரூ. 7. 85 லட்சம் மதிப்பீட்டில் புதிய சுகாதார வளாகம் அமைக்க ஒன்றிய ஒப்புதல் வழங்கி உள்ளது. இதையடுத்து கடந்த ஜூலை மாதம் பழைய சுகாதார வளாக கட்டிடம் இடித்து அகற்றப்பட்ட நிலையில் 3 மாதங்களாகியும் புதிய சுகாதார வளாகம் கட்டப்படாததால் அப்பகுதி எம். துரைச்சாமிபுரம் ஊராட்சி அலுவலகத்தின் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக போராட்டம் நடத்தியவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின் அனைவரும் கலைந்து சென்றனர்