சாத்தூர் - Sattur

சாத்தூர்: பணி ஆணை வழங்கும் விழா.. மாணவ, மாணவிகள் பங்கேற்பு

சாத்தூர்: பணி ஆணை வழங்கும் விழா.. மாணவ, மாணவிகள் பங்கேற்பு

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள பி.எஸ்.ஆர். கல்விக்குழுமங்களில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பி.எஸ்.ஆர். கல்விக்குழுவின் தாளாளர் சோலைசாமி தலைமை தாங்கி, இயக்குனர்கள் டாக்டர் அருண்குமார், விக்னேஷ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார் வரவேற்றுரை வழங்கினார். டீன் மாரிச்சாமி வாழ்த்துரை வழங்கினார்.  நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விப்ரோ நிறுவனத்தின் அதிகாரி ராதிகாரவி கலந்து கொண்டு 1296 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது, தற்போதுள்ள சூழ்நிலையில் மாணவ, மாணவிகள் அதிகளவில் திறமைகளைக் கொண்டிருந்தால் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற முடியும். நேர்காணலின் போது பணி அமர்த்தும் அதிகாரிகள் எதிர்பார்க்கும் திறமைகளை மாணவர், மாணவிகள் பெற்றிருக்க வேண்டும். வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப உள்ளங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். விழாவில் பி.எஸ்.ஆர். கல்விக்குழும முதல்வர்கள் மகேஸ்வரி, ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் சுதாகர் நன்றி கூறினார்.

வீடியோஸ்


விருதுநகர்
Apr 14, 2025, 04:04 IST/திருச்சுழி
திருச்சுழி

அதிமுக ஜெயபெருமாளின் தந்தை பால்ச்சாமி நினைவு தினம்.

Apr 14, 2025, 04:04 IST
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள சித்தனேந்தல் பகுதியில் விருதுநகர் கிழக்கு மாவட்ட அவைத் தலைவரும், இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருமான ஜெயபெருமாளின் தந்தை பால்ச்சாமி அவர்களின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பால்ச்சாமி - ராஜம்மாள் தகவல், உதவி மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய பொதுமக்களின் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 98 பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் 86 கல்லூரி மாணவ, மாணவிகள் என மொத்தம் 184 பேருக்கு ரூ. 19 இலட்சம் மதிப்பீட்டில் கல்வி நிதி உதவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏழை எளிய மக்களின் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி நிதி உதவி வழங்கும் விழாவினை அதிமுக அவைத்தலைவர் ஜெயபெருமாள், அவரது சகோதரர் காஞ்சிபுரம் முன்னாள் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் குடும்பத்தினர் தொடங்கி வைத்தனர்.