சாத்துார் அருகே தமிழக அரசால் தடைசெய்யபட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த முதியவர் கைது. லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சாத்தூரிலுள்ள மெயின் பஜார் மார்கெட் பகுதியில் இயங்கி வரும் டீ கடையில் லாட்டரி சீட்டு மற்றும் நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக சாத்தூர் நகர் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் அருண்குமார் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்தில் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். ஆய்வில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி மற்றும் நம்பர் லாட்டரி சீட்டுகளை சாத்தூர் சேர்ந்த மாபு ஜான் என்பவர் டீ கடை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணத்தை பறிமுதல் செய்த போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.