சாத்தூர் அருகே லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த முதியவர் கைது. லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சாத்துார் வட்டம், வெம்பக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவேங்கடம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஹோட்டல் முன்பாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக வெம்பக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் செண்பகவேலவன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வில் செவல்பட்டியை சேர்ந்த 76 வயதுடைய முதியவர் பெருமாள் என்பவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யபடுவது தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணத்தை கைப்பற்றிய போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.