சாத்தூர் - Sattur

சாத்துார்: சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து; பெண்கள் காயம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஓ.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் தென்காசி மாவட்டம் தேவிபட்டினத்தில் இருந்து ஓ.மேட்டுப்பட்டியில் உள்ள இவரது நிலத்தில் நடைபெறும் விவசாய பணிக்காக மினி லோடு வேனில் 20 பெண்களை அழைத்து வந்தார். தேவிபட்டினத்தைச் சேர்ந்த டிரைவர் கருப்பசாமி வாகனத்தை ஓட்டி வரும்போது காலை ஓ.மேட்டுப்பட்டிக்கு அருகே வேன் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் இந்த வேனில் வந்த பெண்கள் 12 பேர் லேசான காயமடைந்து சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து சாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


விருதுநகர்
Nov 14, 2024, 01:11 IST/சிவகாசி
சிவகாசி

சிவகாசி: ஐயப்பசி மாத பிரதோஷ விழாவில் குவிந்த பக்தர்கள்....

Nov 14, 2024, 01:11 IST
சிவகாசியில் ஐயப்ப சி மாத பிரதோஷ விழாவில் குவிந்த பக்தர்கள். விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றுப் பகுதியிலிருக்கும் சிவன் ஆலயங்களில் ஐயப்பசி மாத பிரதோஷ விழா அதிவிமர்சையாக கொண்டாடப்பட்டன.  பக்தர்கள் கொண்டுவந்த காணிக்கைப் பொருளான இளநீர், பால், தயிர், மஞ்சள் பன்னீர், சந்தனம் மற்றும் வாசனைத் திரவியங்களைக் கொண்டு நந்தி பகவானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டன. பின்னர் நந்தி பகவானுக்கு சந்தனகாப்பு வைத்து வெள்ளிக் கவசம் அணிவித்து வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த பிரதோஷ விழாவில் சிவகாசி மற்றும் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த சிவன் பக்தர்கள் கலந்துகொண்டு நந்தி பகவானை வணங்கிச் சென்றனர்.