சாத்தூர் - Sattur

வீடியோஸ்


விருதுநகர்
மோட்டார் அறைக்கு கதவு அமைக்க கோரிக்கை
Mar 11, 2024, 02:03 IST/அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை

மோட்டார் அறைக்கு கதவு அமைக்க கோரிக்கை

Mar 11, 2024, 02:03 IST
அருப்புக்கோட்டை நெசவாளர் காலணியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சின்டெக்ஸ் தொட்டியுடன் கூடிய மினி பவர் பம்ப் மோட்டார் அறையுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மினி பவர் பம்பில் மோட்டார் உள்ள பகுதி மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள சிறியவர்கள் யாரேனும் மோட்டார் ஓடும்போது தெரியாமல் கையை வைத்தால் மின்விபத்து ஏற்படும் அபாயமும், கையில் காயம் ஏற்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த மினி பவர் பம்பில் மோட்டார் உள்ள அறையை தேவையான நேரத்தில் திறந்து மூடும் படி கதவு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.