விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜய கரிசல் குளத்தில் 3ம் கட்ட அகழ்வாய்வில் சுடு மண்ணால் ஆன விளையாட்டு பொருள், சங்கு வளையல்கள், ஆணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 2600க்கும் மேற்பட்ட பழங்கால பொருள்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளதாக அகழ்வாய்வு இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்*.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வில் 16 குழிகளில் தோண்டப்பட்டு உடைந்த நிலையில் ஆன சுடுமண் உருவ பொம்மை, கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள், வட்டச் சில்லு, தங்கமணிகள் என இதுவரை 2600க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிதாக தோண்டப்பட்ட குழியில் விரலால் சுண்டி விளையாடும் சுடுமண்ணால் ஆன விளையாட்டு பொருள், சங்கு வளையல்கள், ஆணி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்துஅகவாழ்வு இயக்குனர் பாஸ்கர், 3ம் கட்ட அகழ்வாய்வில் முன்னோர்கள் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர். அதற்கு சான்றாக பல்வேறு பொருட்கள் விளையாட்டு பொருள்கள் அகழ்வாய்வில் கிடைத்துள்ளது. தற்போது விரலால் சுண்டி விளையாடும் விளையாட்டு பொருள் கிடைத்துள்ளது. இரும்பு காலத்திற்குக்கு சான்றாக ஆணி கிடைக்கப்பட்டுள்ளது. தொழில்கள் நடைபெற்றதற்கான சான்றாக பல்வேறு அலங்காரங்களில் சங்கு வலைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.