சாத்துார்: சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபர் கைது
சாத்தூர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபர் கைது. 35 மதுபாட்டில்கள் பறிமுதல். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. தகவலின் பேரில் அம்மாபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சர்மிளா மற்றும் போலீசார் இருக்கன்குடி சாலையில் ஆலம்பட்டி விலக்கு பணியில் ஈடுபட்டனர். அப்போது சாத்தூர் அருகே டள்ள திருவிருந்தான்பட்டியை சேர்ந்த தங்கபாண்டி (வயது 41) என்பவர் அனுமதியின்றி மது விற்பனை செய்தது தெரியவந்தது. இதை அடுத்து தங்கபாண்டியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 35 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.