பெரம்பலூர் சா.குடிகாடு, சாத்தனூர், கொளக்காநத்தம், கொட்டரை உள்ளிட்ட பகுதிகளில் ஐம்பது ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்களில் பூசணியை விவசாயிகள் பயிரிட்டனர். அறுவடை பருவத்தில் கனமழை பெய்ததால் பூசணிகள் அழுகிய்து. இதனால் மார்க்கெட்டில் விலை போகவில்லை. இதையடுத்து விவசாயிகள் காய்களை அருகில் உள்ளவர்களின் வீட்டுத் தேவைக்கும் மாடுகளுக்கும் போக மீதமுள்ள பூசணிகளை அருகில் உள்ள சாக்கடையில் மனமின்றி தூக்கிவீசினர்.