சிவகாசி அருகேயுள்ள ஆனையூர் பஞ்சாயத்தில்
சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் கடும் அவதி.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட ஆனையூர் பஞ்சாயத்து பகுதியில் சிவகாசி கோர்ட்டு, இ. எஸ். ஐ. ஆஸ்பத்திரி, அரசு கல்லூரி, கால்நடை மருத்துவமனை, ஆர். டி. ஓ அலுவலகம், வனத்துறை அலுவலகம், சிவகாசி சுகாதார மாவட்ட அலுவலகம் என பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் இருந்து அரசு கல்லூரிக்கு செல்லும் வழியில் பல இடங்களில் மண் சாலை இருக்கிறது. இந்த மண் சாலையில் மழை நேரங்களில்
அதிகளவில் தண்ணீர் தேங்கி நின்று பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து பல முறை யூனியன் நிர்வாகத்திடமும், பஞ்சாயத்து நிர்வாகத்திடமும் சுட்டி காட்டிய பின்னரும் இந்த சாலையை தார்ச்சாலையாக மாற்ற எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. மேலும் இந்த சாலையில் தினமும் குறைந்தது 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தி வரும் நிலையில் முக்கிய பகுதியில் உள்ள இந்த மண் சாலையை தார்ச்சாலையாக மாற்ற தேவையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.