சாத்துார்: குடிநீர் இல்லாமல் அவதிப்படும் பயணிகள்...

51பார்த்தது
சாத்துார் பேருந்து நிலையத்தில் செயல்பாட்டிற்கு வராத மினரல் வாட்டர் ப்ளாண்ட் பயணிகள் கடும் அவதி.
விருதுநகர் மாவட்டம்,
சாத்துார் அண்ணா பவள விழா பேருந்து நிலையத்திலிருந்து மாவட்டம் முழுவதற்கும் பேருந்துகள்
இயக்கப்படுகின்றன. தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்லும் நிலையில் இங்கு முறையான குடிநீர் வசதி இன்றி ஓட்டுநர், நடத்துனர்கள் மற்றும் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். பேருந்து நிலைய முகப்பு பகுதியில் நகராட்சி வைத்துள்ள ஒரு குடிநீர் தொட்டி மட்டுமே செயல்பட்டு வருகிறது.
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு அதிக அளவில் வரும் பக்தர்கள் காரணமாக விரைவில் காலியாகி விடுகிறது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். மேலும் கூடுதலாக சுத்திகரிக்கப்பட்ட மினரல்
வாட்டர் பிளாண்ட் அமைக்க வேண்டும் என மக்கள் நகராட்சியை வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து பேருந்து நிலையத்தில் புதியதாக மினரல் வாட்டர் பிளாண்ட் அமைக்கும் பணி நடந்து வந்தது. புதிய மினரல் வாட்டர் பிளாண்ட் அமைக்கும் பணி நிறைவுற்ற போதும் இன்று வரை அது செயல்பாட்டிற்கு வரவில்லை.
பேருந்து நிலையத்தில் பயணிகள் குடிநீரை காசு கொடுத்து விலைக்கு வாங்கி பருகும் நிலை உள்ளது. பயணிகள் வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட மினரல் வாட்டர் பிளாண்டை விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி