விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா ஆத்திப்பட்டி பகுதியை சார்ந்தவர் சுப்பிரமணியன் (40). இவர் கடந்த 21ஆம் தேதி தனது தாயிடம் சாப்பிட்டுவிட்டு மற்றொரு வீட்டிற்கு தனது மகனுடன் உறங்கச் சென்றதாக கூறப்படுகிறது. மறுநாள் காலை சுப்பிரமணியன் வாயில் நுரை தள்ளியவாறு இறந்து கிடந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அவருடைய தாய் அளித்த புகார் அடிப்படையில் இருக்கன்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்