விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் வரவேற்பிற்கு வைக்கப்பட்டிருந்த வாழைத்தார்களை பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு வெட்டி வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
விருதுநகர் பட்டம்புதூரில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். முதல்வர் ஸ்டாலினை வரவேற்பதற்காக திமுக சார்பில் சாலையின் இரு புறங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் பொதுமக்கள் வாழை மரங்களில் உள்ள வாழைத்தார்களை கைகளால் பறித்தும் அரிவாள், கத்தி ஆகிய ஆயுதங்கள் மூலமாக வாழைத்தார்களை அறுத்து தலையில் தூக்கிக் கொண்டும் வாகனங்களில் ஏற்றிக் கொண்டு வீடுகளுக்கு சென்றனர்.