விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விவசாய பணிக்கு சென்ற 15 பெண்கள் காயமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவிபட்டினத்திலிருந்து சாத்தூர் பகுதிக்கு களை பறிக்கும் வேளாண் பணிக்காக 23 பெண் தொழிலாளர்கள் சரக்கு ஆட்டோவில் வந்துள்ளனர். ஏழாயிரம்பண்ணை அருகே சரக்கு ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது எதிரே பயணிகள் ஆட்டோ வந்ததால் சரக்கு ஆட்டோவை நிறுத்த முயன்ற போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சரக்கு ஆட்டோவில் சென்ற 15 பெண்கள் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் உதவியோடு போலீசார் அவர்களை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நடு ரோட்டில் கவிழ்ந்த ஆட்டோவை அப்புறப்படுத்திய காவல்துறையினர் விபத்து குறித்து ஓட்டுனர் கருப்பசாமி இடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.