விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வருவாய்த்துறை அலுவலர்களுடனான அக்டோபர் - 2024 மாதத்திற்கான பணித்திறன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன். , இ. ஆ. ப. , அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிறப்பாக பணியாற்றிய சிறந்த வருவாய் வட்டாட்சியர்களில், சிவகாசி வருவாய் வட்டாட்சியர் திரு. சி. லட்சம் அவர்களுக்கு முதல் பரிசும், திருச்சுழி வருவாய் வட்டாட்சியர் திரு. சிவக்குமார் அவர்களுக்கு இரண்டாம் பரிசும், சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் திரு. தி. ராமநாதன் அவர்களுக்கு மூன்றாம் பரிசும்,
சிறப்பாக பணியாற்றிய சிறந்த தனி வட்டாட்சியர் (ச. பா. தி) களில் காரியாபட்டி தனி வட்டாட்சியர் (ச. பா. தி) திருமதி கி. தேவாமிர்தம் அவர்களுக்கு முதல் பரிசும், அருப்புக்கோட்டை தனி வட்டாட்சியர் (ச. பா. தி) (பொ) திரு. தே. அறிவழகன் அவர்களுக்கு இரண்டாம் பரிசும், வெம்பக்கோட்டை தனி வட்டாட்சியர் (ச. பா. தி) திருமதி வீ. கிருஷ்ணவேணி அவர்களுக்கு மூன்றாம் பரிசும், வழங்கப்பட்டது.