அருப்புக்கோட்டை - Aruppukkottai

பாளையம்பட்டியில் 5 ஆண்டுகளுக்கு பின்பு கோவில் தேர் வெள்ளோட்டம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பழமையான ஸ்ரீ செங்கமலத்தாயார் சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. ‌ இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி வசந்த விழாவில் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் தேர் பழுது ஏற்பட்டதால் கடந்த 5 ஆண்டுகளாக தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறவில்லை. பிரசித்தி பெற்ற இந்த தேரோட்ட நிகழ்ச்சி மீண்டும் நடைபெறுவதற்காக தேர் புதுப்பிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த புதுப்பிக்கப்பட்ட தேரின் வெள்ளோட்ட நிகழ்ச்சி நேற்று (செப்.,09) வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ கலந்துகொண்டு தேர் வெள்ளோட்டத்தை வடம் பிடித்து துவக்கி வைத்தார்.

வீடியோஸ்


விருதுநகர்