மது பழக்கத்திற்கு அடிமையான நபர் மனவேதனையில் தற்கொலை

72பார்த்தது
மது பழக்கத்திற்கு அடிமையான நபர் மனவேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவருடைய மனைவி அளித்த புகார் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு


விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா பாலைவனத்தம் பகுதியைச் சார்ந்தவர் மாரியம்மாள் இவருடைய கணவர் ராஜேந்திரன் ராஜேந்திரனுக்கு கடந்த மூன்று வருடங்களாக வயிற்றுவலி இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு மருத்துவம் பார்த்து வரும் நிலையில் அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது அதை நிறுத்த சொல்லி பலமுறை அவருடைய மனைவி மாரியம்மாள் ராஜேந்திரனை கண்டித்தாகவும் இதனால் மனவேதனையில் இருந்த ராஜேந்திரன் யாரும் இல்லாத நேரத்தில் பாலைவனத்தம் கிராமத்திலிருந்து பாதையில் உள்ள காட்டில் உள்ள வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து மாரியம்மன் அளித்த புகாரின் அடிப்படையில் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :