ஐபிஎல் தொடர் 2025 மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் ஐபிஎல் அணிகள் தாங்கள் தக்க வைக்கும் வீரர்களின் இறுதி பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை அந்த அணி நிர்வாகம் ரூ. 21 கோடிக்கு தக்க வைத்துள்ளது. ரஜத் படிதார் ரூ. 11 கோடிக்கும், யாஷ் தயாள் ரூ. 5 கோடிக்கும் தக்க வைக்கப்பட்டனர்.