ஒரு சிலருக்கு உணவு சாப்பிட்ட உடனேயே ஏதாவது இனிப்பு சாப்பிட்டால் தான் நிறைவாக இருக்கும். இந்த பழக்கம் உள்ளவர்களுக்கு வளர்சிதை மாற்றம் மற்றும் தூக்க வழக்கத்தில் நாள்பட்ட எதிர்மறை விளைவுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. அளவுக்கு அதிகமாக சர்க்கரையை உட்கொள்வதால் உடல் எடை அதிகரிப்பு, இன்சுலின் எதிர்ப்பு, நீரழிவு நோய் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான அபாயங்கள் உள்ளது.