சாலை அமைக்கும் பணி அமைச்சர் ஆய்வு

62பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் விருதுநகர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள் ஊருக்குள் செல்லாமல் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை அடைவதற்கு ஏதுவாக ரூ 154 கோடி மதிப்பில் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் அருப்புக்கோட்டை நகரின் கிழக்கு பகுதியில் புதிதாக புறவழிச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலை பணிகள் மந்த கதியில் நடைபெற்று வருவதாக புகார் எழுந்த நிலையில் ஆட்சியர் ஜெயசீலன் உடன் இணைந்து வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ சாலை அமைக்கும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். சாலை அமைக்கும் பணியில் உள்ள இடர்பாடுகள் குறித்தும் சாலை பணிகள் குறித்தும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அமைச்சரிடம் விளக்கம் அளித்தனர். அப்போது ரயில்வே கேட் பகுதியில் பாலம் அமைக்க தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாலம் அமைக்கும் பணிகள் அனைத்தும் முடிந்து மார்ச் மாதத்திற்குள் சாலை பணிகளை முழுமையாக முடிப்பதாகவும் அதிகாரிகள் அமைச்சரிடம் கூறினர். அதனைத் தொடர்ந்து ரயில்வே பாலம் அமைய உள்ள இடத்தில் நேரடியாக காரில் சென்று அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க அதிகாரிகளை அமைச்சர் அறிவுறுத்தினார் இந்த ஆய்வின்போது முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி