விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நேரு மைதானம் பகுதியில் அருப்புக்கோட்டை நகர அதிமுக சார்பில் அதிமுக 53 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அருப்புக்கோட்டை நகர அதிமுக செயலாளர் சோலை சேதுபதி ஏற்பாட்டில், கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மாநில அம்மா பேரவை இணை செயலாளர் ராஜவர்மன் முன்னிலையில் நடைபெற்ற இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் அய்யாதுரை பாண்டியன் மற்றும் கொள்கை பரப்பு துணை செயலாளர் முன்னாள் அமைச்சர் மா. பா. பாண்டியராஜன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இந்த பொதுக்கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு அருப்புக்கோட்டை நகர அதிமுக சார்பில் சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மா. பா. பாண்டியராஐன், ஆளும் வளரனும் அறிவும் வளரணும் என எம். ஜி. ஆர் பாடலோடு பேச்சை துவங்கிய பாண்டியராஜன் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் தன்மானத்தை காத்த பத்து தொகுதிகளில் அருப்புக்கோட்டையும் ஒன்று. எம்ஜிஆர் வெற்றி பெற்ற முதலமைச்சரான தொகுதி அருப்புக்கோட்டை.
ஸ்டாலின் முதலில் ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தியது தாலிக்கு தங்கம் திட்டத்தை தான். கட்சி துவங்கி 52 வருடங்களில் 32 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது.