அருப்புக்கோட்டை: குழந்தைகள் நல மையத்தினை திறந்து வைத்த அமைச்சர்

71பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சி ஊராட்சியில் ரூ 14 லட்சம் மதிப்பில் புதிதாக குழந்தைகள் நல மையம் கட்டப்பட்டுள்ளது. குழந்தைகளை கவரும் வகையில் அழகிய வர்ணங்கள் பூசப்பட்டு கண்ணை கவரும் வகையில் இந்த குழந்தைகள் நல மையம் கட்டப்பட்டுள்ளது. ‌

குழந்தைகளுக்கான நவீன விளையாட்டு உபகரணங்களும் எல்இடி டிவி வசதிகளும் இந்த குழந்தைகள் நல மையத்தில் உள்ளது. இந்நிலையில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட இந்த குழந்தைகள் நல மையத்தை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து குழந்தைகள் நல மையத்தில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌, மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், செட்டிகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி