மணல் திருட்டு ஈடுபடுவதாக பொது மக்கள் குற்றச்சாட்டு

59பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கூத்திப்பாறை கிராமத்தில் மிகப்பெரிய கண்மாய் அமைந்துள்ளது. இந்த கன்மாயில் நீர் நிரம்பினால் அருகே உள்ள கண்மாய்கள் மற்றும் கிணற்றில் நீர் வற்றாமல் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த கன்மாயில் தற்போது நீர் இல்லாததை பயன்படுத்தி அந்த பகுதியைச் சார்ந்த திமுக கிளைச் செயலாளர் ரமேஷ் மற்றும் அவருடைய இரண்டு சகோதரர்கள் சட்ட விரோதமாக கடந்த மூன்று நாட்களாக மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும் இதற்கு அரசு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும், அந்த பகுதியைச் சார்ந்தவர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் கடந்த முறை மணல் அள்ளிய போது பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் கொடுத்த உத்தரவின் பெயரில் மணல் அள்ளுவதாக அவர்கள் கூறியதாகவும் இன்றும் அதே போல் சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட நபர்களை கேட்ட பொழுது அந்த பகுதியைச் சார்ந்த விஜயகுமார் என்பவரை தாக்க முயற்சி செய்ததாகவும் அதை தடுக்க வந்த அவருடைய தந்தையையும் அவதூறாக பேசி மிரட்டியதாகவும் தொடர்ந்து இதுபோல் மணல் திருட்டை தடுத்தால் அவர் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்வதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது ஆற்று மணல் அள்ளுவதாக உரிமம் பெற்றுவிட்டு கன்மாயில் உள்ள கரிசல் மண் மற்றும் வண்டல் மண் அள்ளிச் செல்வதாகவும் குற்றம் சாட்டினார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி