அக்டோபர் 27 நாளை மாமன்னர் மருது பாண்டியர்களின் 223 வது ஜெயந்தி விழா மற்றும் அக்டோபர் 30 பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் 117 வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை விழாவை முன்னிட்டு முடியனூர் PNP டிரஸ்ட் கிராம பொதுமக்கள் மற்றும் மருதுபாண்டியர் இளைஞரணி சார்பாக ஏழாம் ஆண்டு ரத்ததான முகாம் இன்று காலை முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது மருது சகோதரர்கள் மற்றும் முத்துராமலிங்க தேவரின் திரு உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரத்ததான முகாமில் ரத்தம் வழங்க வந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு ரத்தம் பெறப்பட்டது. இதில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து ரத்தம் பெற்றுச் சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரத்தம் வழங்கிய கொடையாளர்களுக்கு தலைக்கவசம், பழங்கள், ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டது. இதில் சுமார் 60க்கும் மேற்பட்ட ஆண்கள் ரத்ததானம் செய்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை PNP டிரஸ்ட் தலைவர் K. முத்துக்குமார், பொருளாளர் K. முத்து வீரபாண்டி, செயலாளர் S. முத்துக்குமார், நேதாஜி சுபாஷ் சேனை விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் சின்னமுத்து மற்றும் முடியனூர் கிராம பொதுமக்கள் முடியனூர் மருதுபாண்டியர் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.