அருப்புக்கோட்டை - Aruppukkottai

வழக்கறிஞரை தாக்கிய விவகாரம்; திமுக பிரமுகர் அதிரடி கைது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எம்.டி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (38). வழக்கறிஞராக இருந்து வருகிறார். ‌ இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பாஸ்கரன் தபால் நிலையம் அருகே நேதாஜி சாலையில் காரில் அமர்ந்திருந்த போது அங்கு வந்த மூன்று நபர்கள் பாஸ்கரன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் பாஸ்கரன் அணிந்திருந்த 10 சவரன் தங்க நகைகளையும் அவர்கள் பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த பாஸ்கரன் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் முன்விரோதம் காரணமாக கவுன்சிலர் மணி முருகன் தூண்டுதலின் பேரில் குண்டு பாண்டி, அன்பு கணேஷ் மற்றும் விக்னேஷ் ஆகிய மூன்று பேர் சேர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக பாஸ்கரன் தரப்பு அளித்த புகார் அடிப்படையில் நகர் போலீசார் 5 பிரிவுகளின்‌ கீழ் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் விக்னேஷ் என்பவரை கைது செய்த நிலையில் தற்போது சொக்கலிங்கபுரத்தில் தலைமறைவாக இருந்த கவுன்சிலர் மணி முருகனை நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.

வீடியோஸ்


விருதுநகர்
Sep 20, 2024, 07:09 IST/ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவி: திமுக ஆட்சி விளம்பரத்தில் நடைக்கின்ற ஆட்சி -KTR...

Sep 20, 2024, 07:09 IST
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில், திமுக ஆட்சி விளம்பரத்தில் நடைக்கின்ற ஆட்சி என முன்னாள் அமைச்சர் கே. டி ராஜேந்திர பாலாஜி விமர்சனம். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வத்திராயிருப்பில் அதிமுக சார்பில் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை தமிழக முழுவதும் கொண்டாடுகின்ற கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் தான், இந்த ஆட்சி நல்ல ஆட்சியா? இந்த ஆட்சியில் மக்களுக்கு ஏதாவது கிடைக்கிறதா? எதும் இல்லை. இந்த ஆட்சியில் விலைவாசி உயர்ந்துவிட்டது. இந்த ஆட்சி விளம்பரத்தால் நடக்கும் ஆட்சி. என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். கூட்டத்திற்கு ஸ்ரீவில்லிபுத்துார் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த நகர, ஒன்றிய நிர்வாகிகள் என பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.