சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கப்பட்டது

65பார்த்தது
*அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அருப்புக்கோட்டை நகராட்சி இணைந்து நிகழ்ச்சியில் 125 பயனாளிகளுக்கு தலா ரூபாய் 20, 000 கடன் தொகையை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ வழங்கினார்*

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் இன்று பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அருப்புக்கோட்டை நகராட்சி இணைந்து சாலையோர வியாபாரிகளுக்கான இரண்டாம் கட்டமாக ரூபாய் 20, 000 கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ‌ முதல் கட்டமாக ரூபாய் 10, 000 கடன் வாங்கி முறையாக செலுத்திய 125 நபர்களுக்கு இரண்டாம் கட்டமாக இந்த நிகழ்ச்சியில் ரூ 20, 000 கடன் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ கலந்துகொண்டு, 125 பயனாளிகளுக்கு ரூ 20, 000 கடன் தொகையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌,
நீங்கள் நாணயமாக இருப்பதால்தான் ரூ 10, 000 கடன் வாங்கி முறையாக செலுத்தியதற்காக தற்போது ரூ 20, 000 கடன் ஸ்டேட் வங்கி வழங்குகிறது. அதேபோல நீங்கள் நாணயமாக இருந்து முறையாக கடனை செலுத்தினால் ஸ்டேட் வங்கியும் நாணயமாக இருந்து உங்களுக்கு கூடுதலாக கடன் உதவி செய்வார்கள்
என பேசினார். ‌ அதனை தொடர்ந்து நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு புதிய சீருடையையும் அமைச்சர் வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி