மு. க. ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு
*பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தி விட்டு அருப்புக்கோட்டை வழியாக மதுரை சென்ற முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு காந்திநகர் பகுதியில் திமுகவினர் உற்சாக வரவேற்பு*
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார் அதனைத் தொடர்ந்து மதுரை விமான நிலையம் செல்வதற்காக சாலை மார்க்கமாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வழியாக சென்றார். அப்போது அருப்புக்கோட்டை காந்திநகர் பகுதியில் விருதுநகர் தெற்கு மாவட்ட திமுகவினர் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சரும் தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ஆலோசனைபடி
தெற்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கேகேஎஸ்எஸ்ஆர் ரமேஷ் தலைமையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு சால்வை கொடுத்தும் பரிசுகள் கொடுத்தும் வரவேற்பு அளித்தனர் கட்சியினரின் வரவேற்புக்கு பின் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அங்கிருந்து கிளம்பி சென்றார். முதலமைச்சர் வருகை முன்னிட்டு காந்திநகர் பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.