விருதுநகர் மாவட்டம், சாத்துார் அருகே உள்ள வெம்பக்கோட்டை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட துலுக்கன்குறிச்சியிலுள்ள மது பட்டாசு ஆலை பின்புறமுள்ள காலிமனையில் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக சரவெடிகள் தயார் செய்து இருப்பு வைத்து இருப்பதாக வெம்பக்கோட்டை காவல் நிலையத்துக்கு தகவல் வந்தன.
மேற்படி தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சார்பு ஆய்வாளர் குருநாதன் தலைமையில் போலீஸார் ஆய்வு செய்தனர். ஆய்வில் சட்டவிரோதமாக சரவெடிகள் தயார் செய்து இருப்பு வைத்திருந்த பட்டாசுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட மருதுபாண்டி என்பவரது மீது வெம்பக்கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.