1 கப் மைதா மாவுடன், முக்கால் கப் பொடித்த சர்க்கரையை சேர்க்கவும். அதனுடன் ஏலக்காய், தயிர், பேக்கிங் சோடா, சிறிதளவு உப்பு, நெய் சேர்த்து இளக்கமாக பிசைந்து கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இந்த மாவை சிறு உருண்டைகளாக பொரித்து எடுத்துக் கொள்ளவும். இன்னொரு பக்கம் சர்க்கரை பாகு காய்ச்சிக் கொள்ளவும். பொரித்த உருண்டைகளை சர்க்கரைப் பாகில் சேர்த்து, ஊறவைத்து சாப்பிட்டால் சுவையான பால் பன் ரெடி.