தவெக 2ம் ஆண்டு தொடக்க விழா இன்று (பிப். 26) மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது, இதில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்து மாமல்லபுரத்திற்கு சற்றுமுன்னர் புறப்பட்டு சென்றுள்ளார். இந்த விழாவில் விஜய் என்ன பேச போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்தின் கழுகுப் பார்வை காட்சி வெளியாகியுள்ளது.