வாணியம்பாடி - Vaniyambadi

வாணியம்பாடி: இரு கோஷ்டி இடையே மோதல்.. 7 பேர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஷீராபாத் பகுதி ஆட்டோ ஸ்டாண்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக அதே பகுதியில் தள்ளுவண்டியில் இரவு உணவகம் நடத்தி வரும் பாருக் என்பவருக்கும் மற்றொரு தரப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக நேற்று(அக்.22) இரு தரப்பினர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று இரவு இது குறித்து பாருக்கின் உறவினர் அப்சல் என்பவரை கேட்க சென்ற போது மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதன் பின்னர் அப்சல் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்ந்தார். இது குறித்து தகவல் அறிந்த இரு தரப்பை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் அரசு மருத்துவமனையில் ஒன்று கூடினர். அப்போது அங்கு வாக்கு வாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாருக் தரப்பினர் அரசு மருத்துவமனையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా