தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று (பிப்.26) நடைபெறுகிறது. விழாவையொட்டி வழியெங்கும் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்து வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 6 பாயிண்ட்களுடன் மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து #GETOUT என்கிற ஹேஷ்டேக்கும் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.