"எம்மொழி மீதும் பகை இல்லை; திணித்தால் எதிர்ப்போம்"

74பார்த்தது
"எம்மொழி மீதும் பகை இல்லை; திணித்தால் எதிர்ப்போம்"
‘இந்தியை நீங்கள் திணிப்பதால் எதிர்க்கிறோம்’ என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், “திராவிட இயக்கத்திற்கு எந்த மொழி மீதும் பகை கிடையாது. தமிழ், வேறு எந்த மொழியையும் எதிரியாகக் கருதி அழித்ததில்லை. பிற மொழிகள் தன் மீது ஆதிக்கம் செலுத்த நினைத்தால் அதனை ஒருபோதும் அனுமதித்ததில்லை” என குறிப்பிட்டுள்ளார். மும்மொழி கொள்கை விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி