சென்னை பனையூரில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டின் வாசலில் நின்றிருந்த இளைஞர் ஒருவர், திடீரென தனது கையில் வைத்திருந்த குழந்தையின் செருப்பை விஜய்யின் வீட்டிற்குள் வீசினார். தொடர்ந்து அவரை போலீசார் வெளியேற்றிய நிலையில் அவர் கேரளாவைச் சேர்ந்த விஜய் ரசிகரான மணி என்பது தெரியவந்தது. அவர் கொடுத்த பேட்டியில், “குழந்தைகள் மழை, வெயில் கூட செருப்பு இல்லாமல் இருக்கிறார்கள். அதனை கூறுவதற்காக செருப்பு வீசினேன்” என்றார்.