கடலூர் மாவட்டம் வேப்பூரில் 4 ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து மோதியதால் ஏற்பட்ட கோர விபத்தில் 45 பேர் படுகாயமடைந்துள்ளனர். சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி திடீரென நிறுத்தியதால் பின்னால் சென்ற பேருந்துகள் வரிசையாக மோதின. இந்த கோர விபத்தில் காயமடைந்த 45 பேரும் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.