
ராணிப்பேட்டை: தொடர் ஓட்ட போட்டிகளை தொடங்கி வைத்த அமைச்சர்
ராணிப்பேட்டை மாவட்ட விளையாட்டுத் துறை சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இன்று (ஜனவரி 5) காலை 9:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ஆண்கள், பெண்கள் 5 கிமீ, 10 கிமீ போட்டிகள் தொடர் ஓட்டப் போட்டிகள் தொடங்கின. அமைச்சர் ஆர். காந்தி ஓட்டப் போட்டியைத் தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, மாவட்ட விளையாட்டு அலுவலர், ராணிப்பேட்டை நகரமன்றத் தலைவர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.