"திருப்பதி லட்டு" கடந்த 1715ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி முதல் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது ‘ஸ்ரீவாரி லட்டு’ என்றும் அழைக்கப்படுகிறது. திருப்பதியில் நமக்கு மூன்று விதமான லட்டு கிடைக்கும். கோயிலுக்குள் 40 கிராம் அளவில் பிரசாதமாகவும், விற்பனை கூடங்களில் 175 கிராம் அளவிலும், சில சமயங்களில் 750 கிராம் அளவிலும் வழங்கப்படுகிறது. இந்த லட்டின் மூலம் திருப்பதி தேவஸ்தானம் 500 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது.