ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி. கிரண் ஸ்ருதி உத்தரவின் பேரில், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையம், வாலாஜா, ரத்தினகிரி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் சுதாகர் தலைமையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, விற்பனை செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் 5 கடைகளுக்கு சீல் வைக்கப்படடது. மேலும் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.