தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (செப்.21) பயணிகள் நலன் கருதி கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மாநகர போக்குவரத்து கழகம் தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக தாம்பரத்திலிருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு 10 பேருந்துகள் தி நகர், பிராட்வே பேருந்து நிலையத்திற்கு தலா 20 பேருந்துகள் என மொத்தம் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.