விருதம்பட்டில் உள்ள ஐடா ஸ்கடர் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
வேலூர் அடுத்த விருதம்பட்டு பகுதியில் உள்ள ஐடா ஸ்கடர் தனியார் பள்ளியின் வளாகத்தில் உள்ள பைப் லைனில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், குறிப்பிட்ட நேரத்திற்குள் மாணவர்களை வெளியேற்றி விடுங்கள் என குறிப்பிட்டு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக பள்ளி நிர்வாகம் வேலூர் மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளது. தகவலின் பெயரில் காட்பாடி டிஎஸ்பி தலைமையில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து பள்ளியில் பயிலும் சுமார் 2711 மாணவர்கள் பள்ளி முடிந்து அனைவரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.