கேவி குப்பம் - Kevi Kuppam

குடியாத்தம்: ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.  குடியாத்தம் நகரில் பிரதான சாலைகளில், சாலையோர ஆக்கிரமிப்புகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் இருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, உயர்நீதிமன்ற உத்தரவின்படி குடியாத்தம் நகரில் உள்ள பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து நேற்று (பிப்ரவரி 19) சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்தது.  இதன் முதல் கட்டமாக நேற்று நகரின் மையப் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை சாலைகளில் சாலையோர கடைகள், வீடுகள், கடைகள் மற்றும் துணிக்கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது நகராட்சி பணியாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நிலை ஏற்பட்டது.  இரண்டாவது நாளாக இன்று குடியாத்தம் நகரப் பகுதியில் அண்ணா தெரு, உழவர்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலையோர கடைகள், ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள், கடைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் ஊழியர்கள் காவல்துறையினர் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా