வேலூர் மாவட்டம் குடியாத்தம், ,
திமுக இளைஞரணி செயலாளர் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தமிழக துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
இதனைத் தொடர்ந்து தமிழகமெங்கும் திமுகவினர் பல்வேறு வகையில் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நவீன்ஷங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வேலூர் மாவட்ட செயலாளர் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ. பி. நந்தகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் குடியாத்தம் எம்எல்ஏ அமலு நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.