தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களின் ஒத்திகை நிகழ்ச்சி

53பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அரக்கோணத்தில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் பருவமழை மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களில் இருந்து பொது மக்களை காப்பாற்றுவது எப்படி மற்றும் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஒத்திகையும் நடைபெற்றது.

மேலும் மீட்பு பணியின் போது பெரியோர்களுக்கும், குழந்தைகளுக்கும் எவ்வாறு முதலுதவி அளிக்க வேண்டும் என்பது குறித்தும், தீ விபத்து மற்றும் பாம்பு கடி உள்ளிட்டவற்றுக்கு முதலுதவி எவ்வாறு தர வேண்டும் என்பது குறித்தும் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் தத்துருபமாக நடித்துக் காட்டினர்.

இதில் குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் மற்றும் குடியாத்தம் கோட்டாட்சியர் சுபலட்சுமி வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி