வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தமிழக ஆந்திர எல்லை பகுதியையொட்டிய பரதராமி அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள அங்கனாம்பள்ளி கிராமத்தில் நேற்று இரவு திடீரென ஒற்றை யானை புகுந்துள்ளது.
விவசாய நிலங்களில் இறங்கிய ஒற்றை யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்களை நாசம் செய்துள்ளது. இதனை அறிந்த அப்பகுதி விவசாயிகள் யானையை காட்டுக்குள் விரட்டி உள்ளனர்.
மேலும் இது குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு யானையின் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.