வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 7-வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி, பலவன்சாத்து குப்பத்தில் உள்ள பாட்டியின் வாடகை வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தபோது, வீட்டின் உரிமையாளர் மணிகண்டன் 45 என்பவர், சிறுமியிடம் நைசாக பேசி தனியாக அறைக்கு அழைத்துச் சென்று சிறுமிக்கு பாலியல் சீண்டல் செய்துள்ளார்.
இது குறித்து, சிறுமி அவரது தாயிடம் தெரிவித் நிலையில், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மணிகண்டன் மீது சிறுமியின் தாய் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்த இன்ஸ்பெக்டர் வாசுகி, மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தார்.