வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் ஊராட்சி பகுதியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பனை விதைகளை நடும் விழா நேற்று மாலை மூன்று மணி அளவில் நடைபெற இருந்தது.
அதற்காக அந்தப் பகுதியில் உள்ள குளத்தினை சுற்றிலும் சுத்தம் செய்ய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் இயங்கும் 100 நாட்கள் வேலை பணியாளர் பெண்களை காலை முதல் ஈடுபடுத்தி உள்ளனர்.
பின்பு மாலை நீண்ட நேரம் ஆகியும் அமைச்சர் வராததால் ஆத்திரமடைந்த நிகழ்ச்சிக்காக அமர வைத்திருந்த பெண்கள் எவ்வளவு நேரம் நாங்கள் காத்திருப்பது எங்களுக்கு குடும்பம் குழந்தைகள் இல்லையா. நாங்கள் போய் சமையல் வேலைகளை பார்க்க வேண்டும் என அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.