டென்னிஸ்: காலிறுதியில் மெத்வதேவ், அல்காரஸ் தோல்வி

64பார்த்தது
டென்னிஸ்: காலிறுதியில் மெத்வதேவ், அல்காரஸ் தோல்வி
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் நம்பர் 5 வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், நம்பர் 1 வீரரான இத்தாலி வீரர் சின்னருடன் மோதினார். இதில் சின்னர் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் நம்பர் 3 வீரரான ஸ்பெயின் வீரரான கார்லோஸ் அல்காரஸ், செக் வீரர் தாமஸ் மசாக் உடன் மோதினார். இதில் அல்காரஸ் தோல்வி அடைந்தார்.

தொடர்புடைய செய்தி