வேலூர்: ரூ.53 ஆயிரம் கணக்கில் வராத பணம் லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நேதாஜி சாலையில் செயல்பட்டு வரும் ஆம்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச புகார்கள் அதிகரித்து வந்ததை தொடர்ந்து இன்று மாலை 6: 00 அளவில் அதிரடியாக நுழைந்த திருப்பத்தூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறை அதிகாரிகள் ஆறு பேர் கொண்ட குழுவினர் நான்கு மணி நேரம் மேற்கொண்ட சோதனையில் அலுவலகத்தில் கணக்கில் வராத 53 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் இருப்பதை கண்டறிந்து பணத்தை பறிமுதல் செய்தனர். , மேலும் அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து சார் பதிவாளர் ரமேஷ் குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.