கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் சென்னையில் தமிழர் திருநாளான பொங்கல் விழாவினையொட்டி "சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா" தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
இவ்விழா அனைத்து தரப்பு மக்களின் வரவேற்பினை பெற்றதால்
சென்னை மற்றும் எட்டு முக்கிய நகரங்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டு நடைபெற்று வருகிறது.
அவ்வகையில் வேலூர் சங்கமம் நம்ம ஊரு திருவிழா வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. விழாவில் மங்கல இசையுடன் திரைப்படபுகழ் கிராமிய நடன இயக்குநர் திருவண்ணாமலை பேசு. ஜே. கே. (ஜெயக்குமார்) நடன ஒருங்கிணைப்பில் 75 கலைஞர்கள் இணைந்து காவடியாட்டம், புரவியாட்டம், புலியாட்டம், பன்முகப்பறை, பம்பை, கைச்சிலம்பாட்டம், ஆகியவற்றுடன் இசை நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் குருமன்ஸ் சேவையாட்டம், தப்பாட்டம், கோலாட்டம், பெரிய மேளம், தெருக்கூத்து கொக்கலிக்கட்டை ஆட்டம் என கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதனை வேலூர் மாநகர மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டுக்களித்தனர்.